மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக் கோயில் இருந்த குணப்பெருங் குன்றே வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய் தனிநட ராசஎன் சற்குரு மணியே