மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான் வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல் நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன் நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான் கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள் குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல் தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே