மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள் வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத் தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக் காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே