மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும் சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே