மாலயன் தேடு மருந்து - முன்ன மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து காலனைச் சாய்த்த மருந்து - தேவர் காணுங் கனவினுங் காணா மருந்து நல்ல
மாலயன் தேடியும் காணாம லையை வந்தனை செய்பவர் கண்டம ருந்தை ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை ஆதியை ஆதியோ டந்தமி லானைக் காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக் கருணைக்க டலைஎன் கண்ணனை யானை ஏலம ணிகுழ லாள்இடத் தானை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே