மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான் காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார் சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே
மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின் காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப் போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம் பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே