மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலஞ்சார் தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது காலிலே ஆசை வைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனைநின் பாலிலே வைத்தாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே