மாலே றுடைத்தாங் கொடிஉடையார் வளஞ்சேர் ஒற்றி மாநகரார் பாலே றணிநீற் றழகர்அவர் பாவி யேனைப் பரிந்திலரே கோலே றுண்ட மதன்கரும்பைக் குனித்தான் அம்புங் கோத்தனன்காண் சேலே றுண்கண் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே