மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான் மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை வேலை ஒன்றல மிகப்பல எனினும் வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண் சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர் தூய மால்விடைத் துவசத்தி னீரே