மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய் கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச் சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே