மாலொடு நான்கு வதனனும் காணா மலரடிக் கடிமைசெய் தினிப்பாம் பாலொடு கலந்த தேன்என உன்சீர் பாடும்நாள் எந்தநாள் அறியேன் வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை விளைவித்த வித்தக விளக்கே காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே