மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும் வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப் பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத் தாவிநடந் திரவின்மனைக் கதவுதிறப் பித்தே தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய் நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில் நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே