மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண் ஆவென் றலறிக் கண்ணீர்விட் டழுதால் துயரம் ஆறுமடி கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே