மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள் தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும் சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே