மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும் மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய் தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத் துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே