மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக் கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே