மின்னாளும் இடைமடவார் அல்கு லாய வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால் எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க் காரமுதே அருட்கடலே அமரர் கோவே தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே