மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான் பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல் மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே