மின்னை அன்னநுண் இடைஇள மடவார் வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன் புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன் அன்னை என்னநல் அருள்தரும் தணிகை அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன் என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ என்செய் வான்பிறந் தேன்எளி யேனே