மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம் மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன் என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில் என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்ற அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன் ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான் தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே