மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப் பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் முழ்கிப் பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப் போற்றாது வீணேநாள் போக்கு கின்ற என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே