மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன் விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன் முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர் முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே