மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள் மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச் சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன் செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய் மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே