மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால் மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன் கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே