முடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய முறியனேன் தனக்குநின் அடியாம் ஏடவிழ் கமலத் திருநற வருந்த என்றுகொல் அருள்புரிந் திடுவாய் ஆடர வணிந்தே அம்பலத் தாடும் ஐயருக் கொருதவப் பேறே கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக் குற்றமர்ந் திடுகுணக் குன்றே