முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும் முடனேன் முழுப்புலை முறியேன் எட்டியே அனையேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் ஒட்டியே அன்பர் உனத்தெழும் களிப்பே ஒளிக்குளாம் சோதியே கரும்பின் கட்டியே தேனே சடையுடைக் கனியே காலமும் கடந்தவர் கருத்தே