முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன் மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால் விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன் இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே திருச்சிற்றம்பலம் பணித்திறஞ் சாலாப் பாடிழிவு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்