முத்தனை முத்திக் கொருதனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப் பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர் சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத் துரியனைத் துரியமும் கடந்த சத்தனை நித்த நின்மலச் சுடரைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே