முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின் முடிகள்முடித் துரைக்கின்ற அடிகள்மிக வருந்தப் பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப் படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம் திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன் தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே