முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம் தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ