முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய் புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய் சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச் சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்