முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன் முன்னர்நீ தோன்றினை அந்தோ அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன் அப்பனே அய்யனே அரசே இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம் என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய் எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங் கெய்துதற் குரியமெய்த் தவமே