முந்தைவினை யால்நினது வழியில் செல்லா முடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற தந்தைவழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர் எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன் சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே