முனித்தவௌ; வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித் தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன் குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்