முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன் என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே