முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என் முடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன் புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனிதஅருட் கடலாடேன் புளகம் முடேன் பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே