முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன் இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய் என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே