முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும் என்னவனே என்துணையே என்உறவே என்னை ஈன்றவனே என்தாயே என்குருவே எனது மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண் மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே