முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே