முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால் இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன் என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே