முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே முக்கணா முவர்க்கும் முதல்வா மன்னிய கருணை வாரியே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன் அருட்பெரும் கோயில்வந் தடைந்தால் என்இது சிவனே பகைவரைப் போல்பார்த் திருப்பதுன் திருவருட் கியல்போ