முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக் கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ