முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின் முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன் தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின் தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல் யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார் பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம் பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே