முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும் அவர்க் கிதங்கூ றேனோ