முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித் தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன் மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே