முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன் என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் எய்தில னேல்உயிர்க் குறுதிப் பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் பேதையில் பேதைநான் அன்றோ கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே கடவுளே கருணையங் கடலே