முன்னொடு பின்னும் நீதரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால் என்புணர்ப் பலவே என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவ தென்னோ சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே