முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் றுளமயக் குறுங்கால் அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம் இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிர்எனுங் குருவே