மும்மையை எல்லாம் உடையபே ரரசை முழுதொருங் குணர்த்திய உணர்வை வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம் வியப்புற அளித்தமெய் விளைவைச் செம்மையை எல்லாச் சித்தியும் என்பால் சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை அம்மையைக் கருணை அப்பனை என்பே ரன்பனைக் கண்டுகொண் டேனே