முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம் மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி